தமிழ் சினிமாவில் பிரமாண்டமான இயக்குனரான சங்கரின் மூத்த மகள் அதிதி. இவர் விரும்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலே பின்னணி பாடகியாவும் தடம் பதித்துள்ளார். மேலும் நடனத்திலும் யாரும் குறை சொல்லாதபடி ரகளை செய்துள்ளார். இதனால் அதிதிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதன்படி மண்டேலோ பட இயக்குனரான மாடோன் அஷ்வின் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அத்தி நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைக்கப்பட்டு தொடங்கியுள்ளது. முதல் நாள் படப்பிடிப்பிலே அதிதி சங்கர் பங்கேற்றுள்ளார். இந்த படபிடிப்பில யோகி பாபு இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மோனிஷா பிளஸ்ஸி சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் பிரபல இயக்குனரான மிஸ்கின் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். நடிகை சரிதா சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்கிறார். மேலும் மாவீரன் திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசை அமைக்கிறார்.