Categories
தேசிய செய்திகள்

அடடே…! அம்பேத்கர் பெயரில் புதிய மாவட்டம்…. மாநில அரசு அதிரடி….!!!!

ஆந்திர மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கோணசீமா மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டி அந்த மாநில அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டிருந்தார்.  ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோணசீமா பரிரக்ஷனா சமிதி, கோனசீமா சாதனா சமிதி மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் அமைதியாக தொடங்கிய போராட்டம் பின்னர் வன்முறையில் முடிந்தது.

அதனை தொடர்ந்து ஆந்திராவின் பல்வேறு மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. பேருந்துகள், வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தற்போது அம்மாவட்டத்திற்கு அம்பேத்கர் கோணசீமா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Categories

Tech |