Categories
மாநில செய்திகள்

அடடே…. அரசின் இந்த சலுகையை பெற ஓர் ஆண்டு போதுமாம்…. அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்த படுவதற்காக தமிழக அரசு அறிவித்தது. அதன் பிறகு அதற்கான அரசாணையும் அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், பணிவரன் முறைபடுத்த மற்றும் தற்காலிக பணியாளர்கள் மகப்பேறு விடுப்பு வழங்க கோரி விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. அதில் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த மனு மீதான விசாரணையில், தமிழக அரசு சார்பில் மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் வரன் செய்யப்படாத ஊழியர்களுக்கும் இடையில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. மேலும் வரன்முறைப்படுத்தாத ஊழியர்கள் பணியில் சேர்ந்து ஓராண்டு முடித்திருந்தால் விடுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றும் மகப்பேறு விடுப்பு270 நாட்களிலிருந்து 365 நாட்களாக அதிகரித்து ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தை ஏற்ற நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

Categories

Tech |