Categories
மாநில செய்திகள்

அடடே! ஆசிரியர்கள் வைத்த கோரிக்கை….. மாணவர்களுக்கு செம குட் நியூஸ்…!!!!

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியீடு, வினாத்தாள் கட்டணம் ஆகியவை குறித்து தமிழக தலைமை ஆசிரியர்கள் அரசுக்கு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே நேரத்தில் காலாண்டு அரையாண்டு தேர்வு நடத்த வேண்டும். அதற்கான வெளியிடப்படும் தேர்வு அட்டவணையை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்காக அரசு விதிப்படி அந்தந்த பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து அதிகபட்சமாக 40 ரூபாய் வரை வினாத்தாள் கட்டணம் பெறப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் செயல்படாததால் தேர்வுகள் நடத்தப்படாததால் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இந்த நிலையில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரையாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான வினாத்தாள் கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை பள்ளிகளில் வினாத்தாளுக்கான கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதனால் அந்தந்த பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அதன் நகலை எடுத்து தேர்வு நடத்தப்பட வேண்டும். அதனால் அதற்கான செலவை தலைமை ஆசிரியர்களே ஏற்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே அரசே ஏற்க வேண்டும். இதனால் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுவதற்கு வாய்ப்பில்லை என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |