இந்திய நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் ஒரு பெண்மணி என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆம் இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் தான் இறக்கும் தருவாயில் இருந்தபோது தன்னுடைய மகளை இந்திய நாட்டிற்காக உளவு பார்ப்பதற்காக அனுப்பியுள்ளார். இதன் காரணமாக அந்த பெண்மணிக்கு உளவுத்துறை சம்பந்தமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு உயரதிகாரிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்தப் பெண் பாகிஸ்தான் இந்தியாவின் மீது எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என போட்டு வைத்திருந்த திட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த தகவல்களால் தான் கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தோ பாகிஸ்தான் போரின்போது இந்திய நாட்டை சேர்ந்த பலரின் உயிர்கள் காப்பாற்றப் பட்டது. இதனையடுத்து அந்தப் பெண் தன்னுடைய மகனுடன் இந்திய நாட்டிற்கு தப்பித்து வந்து விட்டார். இந்த பெண்மணியின் மகன் இந்திய நாட்டின் ராணுவ வீரராக பணியாற்றுகிறார். மேலும் இதை இந்திய நாட்டிற்காக செய்தது ஒரு காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஆவார். ஆனால் அந்தப் பெண்மணியின் எந்த ஒரு விவரத்தையும் இதுவரை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்துள்ளனர்.