கோழி இனங்கள் காடுகளிலும், மனிதர்களால் வீடுகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணி பறவையாகும். உலகத்தில் உள்ள எல்லா கோழி இனங்களும் இந்தியாவில் உள்ள சிவப்பு காட்டுக் கோழியில் இருந்து தான் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்தக் கோழிகள் முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகிறது. இந்த கோழி இனங்கள் 4 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
அதன்படி அமெரிக்க கோழி இனங்கள், ஆசிய கோழி இனங்கள், ஆங்கில கோழி இனங்கள், மத்திய கோழி இனங்கள் ஆகும். இந்நிலையில் கோழிகளின் கண்கள் மனிதர்களின் கண்களை விட மிகவும் கூர்மையானவை ஆகும். அதாவது மனிதர்களின் கண்களை விட 15 மடங்கு அதிகமாக தெளிவாக தெரியும். உதாரணமாக வானவில்லில் 7 வண்ணங்கள் உண்டு. ஆனால் வானவில் தோன்றும் போது சில நிறங்கள் மட்டுமே மனிதர்களின் கண்களுக்கு தெரியும். ஆனால் கோழிகளுக்கு வானவில்லில் இருக்கும் 7 நிறங்களும் தெளிவாக தெரியும் என கூறப்படுகிறது.