Categories
பல்சுவை

அடடே! ஆச்சரியமாக இருக்கிறதே…. இப்படி ஒரு திறமையா….? இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

உலகத்தில் மிகவும் புகழ் பெற்றதும், பரவலாக விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக கூடைப்பந்து விளையாட்டு இருக்கிறது. இந்த கூடைப்பந்து விளையாட்டு 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டில் ஒரு அணிக்கு 5 பேர் வீதம் மொத்தம் 10 பேர் விளையாடுவார்கள். இந்நிலையில் கூடைப்பந்து விளையாட்டு நடக்கும் போது பொதுவாக ஆடியன்ஸ்களை அழைத்து விளையாட சொல்வார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

இந்நிலையில் ஒரு கண்பார்வையற்ற பெண்மணி கூடைப்பந்து விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக விளையாட்டு அரங்கத்திற்கு வந்துள்ளார். ஆனால் அவருக்கு கண் பார்வை தெரியாததால் ஒருவர் கூடை இருக்கும் இடத்தில் ஒரு குச்சியால் அடித்து சத்தம் எழுப்பினர். அந்த ஓசையை நன்றாக கவனித்து அந்த கண் பார்வையற்ற பெண்மணி பந்தை கூடையில் போட்டு விட்டார். மேலும் தன்னுடைய குறைகளை எண்ணி கவலைப்படாமல் சாதிக்கலாம் என்பதை அந்த பெண்மணி  நிரூபித்திருக்கிறார்.

Categories

Tech |