80 கிலோ எடை கொண்ட வாழைத்தாரை பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூத்தூர் கிராமத்தில் விவசாயியான சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டு தோட்டத்தில் சில வாழை மரங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு நட்டு வைத்தார். தற்போது அந்த வாழை மரங்கள் வளர்ந்துள்ளது. இந்நிலையில் கற்பகவல்லி ரக வாழைமரம் ஒன்றில் இருந்த வாழைத்தாரை சுந்தர் நேற்று வெட்டியுள்ளார்.
அப்போது அந்த வாழைத்தார் 6 அடி உயரமும், 80 கிலோ எடையும் கொண்டுள்ளது. மேலும் இந்த வாழைத்தாரில் மொத்தம் 650 காய்கள் இருந்துள்ளது. இந்த அதிசய வாழைத்தாரை ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.