இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது.இது வெறும் அடையாளம் ஆவணமாக மட்டுமல்லாமல் பணம் சார்ந்த பல விஷயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்துமே ஆதார் கார்டு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டின் விவரங்களை எப்போதுமே அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும்.
இந்த ஆதார் கார்டில் பல நன்மைகளும் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பேலன்ஸ் பார்ப்பது. அதாவது வங்கி கணக்கு பேலன்ஸ் எளிதில் பார்த்துக் கொள்ள முடியும். அதற்கு முதலில் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து *99*99*1#என்ற நம்பருக்கு டயல் செய்ய வேண்டும். அதன் பிறகு 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டவுடன் ஆதார் சரி பார்த்து நடைபெறும். பின்னர் மொபைல் நம்பருக்கு ஒரு எஸ்எம்எஸ் வரவும். இந்த எஸ் எம் எஸ் இல் வங்கி கணக்கு பேலன்ஸ் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இருக்கும். அதில் நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும்.
ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் தற்போது புதிய அப்டேட்டுகள் பல தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் டோர்ஸ் டெப் சேவை. இதன் மூலம் வாடிக்கையாளரின் வீட்டுக்கே வந்து மொபைல் நம்பர் திருத்தம் உள்ளிட்ட அப்டேட்டுகளை செய்ய முடியும் என ஆதார அமைப்பு தெரிவித்துள்ளது.