Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடடே.. ஆழ்கடலில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடிய மீனவர்கள்… எங்கு தெரியுமா…??

கன்னியாகுமரி மாவட்டத்தில் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பாக குளச்சல் ஆழ்கடல் பகுதியில் விசைப்படகில் வைத்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பாட்னா தேசிய சட்டக் கல்லூரி பேராசிரியருமான அருட்தந்தை பீட்டர் லடீஸ் மற்றும் மீனவர் தோழமை தலைவரும் தலைமை தாங்கியுள்ளார். இதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வக்கீல் திண்டுக்கல் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரக்சன் முன்னிலை வகித்துள்ளார். பொருளாளர் லிட்டில் பிளவர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதில் குளச்சல் பகுதியில் உள்ள அரிஸ்டோ என்பவருக்கு சொந்தமான இன்பாண்ட் ஜுசஸ் என்ற விசைப்படகு குழந்தை இயேசுவுக்கு குடிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் விசைப்படகுகள், நாட்டு படகுகளில் ஆழ்கடலுக்குள் சென்று கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி கிறிஸ்துமஸ் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த மக்களும் வெளிமாநிலத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |