Categories
பல்சுவை

அடடே! இதற்காகத்தான் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கிறார்களா…? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே….!!!!

ஒரு குழந்தை பிறந்தவுடன் எதற்காக மொட்டை அடிக்கிறார்கள் என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அதற்கு மொத்தம் 3 முறை மொட்டை அடிக்கிறார்கள். எதற்காக  தெரியுமா? அதாவது குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது பனிக்குடத்தில் ஒரு திரவத்தில் இருக்கிறது. ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சிறுநீர் கழிக்க ஆரம்பித்துவிடும். அதன்பின் பனிக்குடத்தில் இருக்கும் திரவம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றில் தான் குழந்தையானது வளர்கிறது.

இதனையடுத்து குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்த பிறகு பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் குழந்தையின் உடலில் இருக்கும் கழிவுகளை சுத்தம் செய்து விடுவார்கள். ஆனால் தலையில் இருக்கும் கழிவுகளை மருத்துவர்கள் சுத்தம் செய்வதில்லை. ஏனெனில் தலையில் இருக்கும் கழிவுகளை சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிது கிடையாது. இதன் காரணமாகத்தான் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கிறார்கள். இப்படி மொட்டை அடிக்கும் போது தலையில் இருக்கும் கழிவுகள் முடியின் வழியாக அகற்றப்படுகிறது.

Categories

Tech |