Categories
தேசிய செய்திகள்

அடடே இதல்லவா தாய் பாசம்…. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டியைக் காப்பாற்றிய தாய் யானை…. வைரலாகும் வீடியோ….!!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் வடக்கு வங்காளத்தில் நக்ரகடாஎன்ற பகுதி அருகே உள்ள ஆறு ஒன்றின் இந்தப் பக்கத்திலிருந்து யானை கூட்டம் ஒன்று கடந்து அந்தப்பக்கம் சென்றுள்ளது. அப்போது ஆற்றில் அதிவேக நீரோட்டம் இருந்ததால் அந்தக் கூட்டத்திலிருந்த குட்டியானை ஒன்று அங்கு சிக்கிக் கொண்டது. அதனைக் கண்ட தாய் யானை கூட்டத்தினரை ஒருமுறை பார்த்துவிட்டு குட்டி யானையை பார்க்கிறது. அந்த கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் எதுவும் உதவிக்கு வராமல் ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றை கடந்து கரையேறின.

இருந்தாலும் தனது குட்டியை மீட்கும் முயற்சியில் தாய் யானை இறங்கியது. அப்போது சற்று தூரம் குட்டியானை நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதன் பின்னாலேயே சென்ற தாய் யானை கரையை நோக்கி குட்டி யானையை தள்ளியது. குட்டி யானை கரையை சேர்ந்த பிறகு அதனை அழைத்துக் கொண்டு தனது கூட்டம் மேல் ஏறிய வழியில் அதுவும் பயணித்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மனிதர்களைப் போலவே விலங்குகள் மற்றும் பறவை போன்ற இடங்களும் தாயன்புடன் செயல்படும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு எடுத்துக்காட்டு.

Categories

Tech |