கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” கதாநாயகனாக சிம்பு நடித்திருந்தார். இப் படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்று உள்ளது. அதுவும் மல்லிகைப்பூ பாடல் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த திரைப்பட வெற்றியை தொடர்ந்து “வெந்து தணிந்தது காடு” இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக கௌதம் மேனன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் “வெந்து தணிந்தது காடு” இரண்டாம் பாகத்தில் இரண்டு ஹீரோக்களையும் கொண்ட படமாக இருக்கும் என்று கவுதம் மேனன் விளக்கம் அளித்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரண்டாம் பாகத்தில் ஸ்ரீதரன் முக்கியமான கதாபாத்திரம். இது கிட்டத்தட்ட இரண்டு ஹீரோ கொண்ட படமாக தான் இருக்கும். முதல் பாகத்தில் முத்து ஸ்ரீதரனை பார்த்துவிட்டு பேசாமல் போனதன் காரணம் என்னுடைய ரத்தமும் ரத்தப் படிந்த கரையும் அவன் மேல் இருக்கக் கூடாது. இவன் என்னைக்கும் என் வாழ்க்கையில் வரமாட்டான் என்று கூறி தான் பேசாமல் முத்து போகிறார். இந்த காட்சிக்கான விளக்கம் இரண்டாம் பாகத்தில் உங்களுக்கு புரியும் என்று தெரிவித்துள்ளார்.