Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. இதுக்கு காரணம் தனுஷ் தானா?…. தீயாய் பரவும் செய்தி…. செம ஷாக்கில் ரசிகர்கள்….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். இதில் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வாத்தி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தனுஷ் வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு படத்தில் நேரடியாக அறிமுகமாகிறார். இந்த நிலையில் தனுஷ் தான் வாத்தி படத்தின் கதையை எழுதியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் மற்றும் தனுஷ் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்ட போது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை முதலில் செல்வராகவன் தான் உருவாக்க நினைத்தாராம். இருப்பினும் படத்தின் ஒரு வரிக் கதையை தனுஷ் செல்வராகவனிடம் கூறியுள்ளார். அதனைக் கேட்ட செல்வராகவனும் இந்த கதையை படமாக எடுத்து விடலாமே என்று முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு தனுஷின் ஒரு வரி கதையை விரிவுபடுத்தி செல்வராகவன் முழுக்கதையையும் எழுதியுள்ளதாக ஒரு தகவல் உலாவி வருகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

Categories

Tech |