அனைவரும் பார்த்து கவனமாக கையாள வேண்டிய ஒரு பொருள் கண்ணாடி. அது கீழே விழுந்து உடைந்து சிறு துளி கையில் பட்டால் கூட ரத்தம் வந்துவிடும்.
ஆனால் தமிழ் சினிமாவில் நாம் பல்வேறு சண்டைக்காட்சிகளை பார்த்திருப்போம். அதில் சில படங்களில் கண்ணாடி பாட்டில்களை வைத்து தலையில் அடிப்பது, உடைப்பது போன்ற காட்சிகளை இடம்பெற்றிருக்கும். இருப்பினும் அவர்களுக்கு மட்டும் எதுவும் ஆகாது.
அது எப்படி என்று தெரியுமா. திரைப்படங்களில் பயன்படுத்தும் பாட்டில்கள் சர்க்கரை வைத்து செய்கிறார்கள். எப்படி என்றால் சுக்ரோஸ், குளுக்கோஸ், தண்ணீர் இவை மூன்றையும் 300° f சூடு படுத்துகிறார்கள். பின்பு பாட்டில் வடிவத்தில் இருக்கும் ஒரு மோல்டில் அதனை ஊற்றுகிறார்கள். இதனைத் தொடர்ந்து அதனை பார்க்கும்போது உண்மையான பாட்டில் போலவே காணப்படுகிறது.