உலகில் ஒவ்வொருவருக்கும் தனித் தனித் திறமை உள்ளது. ஆனால் அதை சிலர் வெளிப்படுத்துவதில்லை. தன்னிடம் உள்ள குறைகளை திருத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறப் அவன்தான் இறுதியில் வெற்றி பெறுகிறான். அப்படி இரண்டு கைகளை இழந்தாலும் மன தைரியத்தின் மூலமாக வாழ்க்கையில் ஜெயித்து காட்டிய இளைஞர்தான் அமீர் ஹுசைன் லோன். ஒரு விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்த இவர், கிரிக்கெட்டின் மீது தீராத காதல் கொண்டவர்.
இவரின் கிரிக்கெட் ஆர்வத்தையும் திறமையையும் கண்ட பேராசிரியர் ஒருவர் பாரா கிரிக்கெட்டில் சேருமாறு இவரை வலியுறுத்தியுள்ளார். இரண்டு கைகளும் இல்லாமல் களத்தில் இறங்கிய அமீருக்கு தொடக்கத்தில் கிரிக்கெட் மிகவும் சோதித்தது. ஆனால் விடா முயற்சியின் காரணமாக பயிற்சிக்குப் பிறகு கழுத்தையும் தோல் பட்டையையும் பயன்படுத்தி பேட்டை எவ்வாறு இருக்கமாக பிடித்து பேட்டிங் செய்வது என கற்றுக் கொண்டார்.
தனது கால்களிலேயே பந்தை பிடித்து எப்படி பந்து வீசுவது என்பதையும் கற்றுக் கொண்டார். இவரின் திறமையை பார்த்து வியந்த பாரா கிரிக்கெட் நிர்வாகம் 2013-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணி கேப்டனாக இவரை நியமித்தது. இவர் பாரா கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்காக பல்வேறு போட்டிகளில் ஆடியுள்ளார். அதனால் இன்று உலகே வியந்து பார்க்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். மனிதன் சாதிப்பதற்கு உடலில் உள்ள குறைபாடு ஒரு தடையே இல்லை என்பதற்கு மகுடம் சூட்டியவர் இவர்