Categories
தேசிய செய்திகள்

அடடே இது அல்லவா வெற்றி…. காமெடியன் டூ முதலமைச்சர்…. குஷியில் துள்ளிக்குதிக்கும் ஆம் ஆத்மி….!!!!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ஜனவரி மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் பஞ்சாபை பொறுத்தவரையிலும் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அதாவது கௌரவமான வெற்றியை பெற வேண்டும் என்ற நிலையில் பாஜக பயணித்தது.
கடந்த முறை எதிர்க்கட்சியாக அமர்ந்த ஆம் ஆத்மி இந்த முறை ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக களப் பணியாற்றியது.

அந்த கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் மான் (பகவந்த் மான்) அறிவிக்கப்பட்டார். இவர் ஒரு நகைச்சுவையான நடிகர் ஆவார். தற்போது மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 89 தொகுதிகளை வென்று வீரநடை போட்டு வருகிறது. இதனால் பகவந்த் மான் முதலமைச்சராக விரைவில் பொறுப்பேற்க இருக்கிறார். அதனை தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் பகவந்த் வீடு முன்பு கூடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறை ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த காங்கிரஸ் இம்முறை 20 தொகுதிகளில் சுருங்கி இருக்கிறது.

Categories

Tech |