தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பானது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். மேலும் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளை அளித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 151 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தொற்று எதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து கொரோனாவினால் 2 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 38,019 ஆக உள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 2,145 ஆக உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 51 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.