Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

அடடே!…. இது என்ன வித்தியாசமா இருக்கு?…. இப்படி ஒரு பட்டாம்பூச்சியா?!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தேடுவார்நத்தம் என்ற பகுதியில் வேலன், ஆனந்த் என்ற இரு சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது வீட்டின் பின்பக்க தோட்டத்தில் இன்று மாலை ஆனந்த் காயவைக்கப்பட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது உருவத்தில் வித்தியாசமான பூச்சி ஒன்று அங்கிருந்த செடிகளில் இருப்பதை கண்டார். சிறிது நேரத்தில் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அதன் அருகில் சென்று பார்த்தபோது அது உருவத்தில் பட்டாம்பூச்சி போல தெரிந்துள்ளது.

ஆனால் சாதாரண பட்டாம்பூச்சியை விட அகோரமாகவும், வித்தியாசமாகவும் இருந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்த பட்டாம்பூச்சியின் மேல்பகுதி கோட்டான், ஆந்தை போலவும், வேற்றுக்கிரகவாசிகள் போலவும் இருந்துள்ளது. அதேபோல் அந்த பூச்சியின் அனைத்து இறக்கைகளும் வேற்றுகிரகவாசிகள் போலவே இருந்ததால் தம்பி வேலனின் உதவியுடன் ஆனந்த் அந்த பூச்சியை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

Categories

Tech |