வாட்ஸ் அப் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக இனி ஒருவருடன் பேசுவது தானாகவே டெலிட்டாகி விடும். இது ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது ஒரு வாரத்திற்கு ஒரு முறை அல்லது 90 நாட்களுக்கு ஒருமுறை தானாகவே டெலிட் ஆகிவிடும். இதில் எதை வேண்டுமோ அதை நாம் தேர்வு செய்து கொள்ள முடியும். இல்லை இந்த அம்சம் நமக்கு வேண்டியது இல்லை என்று எண்ணினால் அதை ஆப் செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே பயனாளர்கள் அனுப்பும் தகவல்கள் ஏழு நாட்களுக்குப் பிறகு அழிந்து விடும் வகையில் தேர்வு செய்யும் முறை உள்ளது. இதில் ஒவ்வொரு நபரின் உரையாடலுக்கும் தனித்தனியாக தேர்வு செய்து அளிக்க முடியும். ஆனால் இனி அவ்வாறு இல்லாமல் மொத்தமாக அனைத்து உரையாடல்களிலும் தாங்கள் அனுப்பும் செய்தி அழிந்துவிடும். இந்த அம்சத்தை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது. இன்று முதல் இந்த அம்சம் நடைமுறைக்கு வர உள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பர்க் தெரிவித்துள்ளார்,