Categories
தேசிய செய்திகள்

அடடே!.. இது சூப்பரா இருக்கே…. “வீட்டுல சும்மா இருக்கும் நகையில் சூப்பர் வருமானம்”…. தெரிஞ்சிக்கோங்க….!!!!!

இந்திய அரசு தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை கடந்த 2015-ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் எளிய முறையில் வீட்டில் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்தும் வட்டி மூலம் வருமானம் பெற முடியும். அதாவது லாக்கரிலும், வீடுகளிலும் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து பணம் சம்பாதிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் நிறுவனங்களும், தனிநபர்களும் தங்களது தங்கத்தை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு பணமும் ஈசியாக சம்பாதிக்க முடிகிறது.

இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ் வங்கியில் தங்கத்தை டெபாசிட் செய்யலாம். அதேபோல் தங்கத்தை நகை வடிவிலும் டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் நீண்டகால டெபாசிட் ( 12- 15 ஆண்டுகள் ), நடுத்தர கால டெபாசிட் ( 5-7 ஆண்டுகள் ) குறுகிய கால டெபாசிட் ( 1-3 ஆண்டுகள் ) என 3 வகையான தங்கம் டெபாசிட் உள்ளன.

வட்டி விகிதம் (ஆண்டுக்கு) : –

1 ஆண்டு – 0.50%
1 – 2 ஆண்டுகள் – 0.55%
2 – 3 ஆண்டுகள் – 0.60%
5 – 7 ஆண்டுகள் – 2.25%
12 – 15 ஆண்டுகள் – 2.50%

Categories

Tech |