Categories
லைப் ஸ்டைல்

அடடே இது தெரியாம போச்சே?… உப்பு இதற்கும் பயன்படுமா?…!!!

நம் வீட்டில் சமையலைத் தவிர உப்பு வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உப்பு என்பது மிகவும் முக்கியம். அவ்வாறு உப்பை சமையலுக்கு பயன்படுத்தி மட்டும் தான் நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அது வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பது பற்றி தற்போது தெரிந்து கொள்ளுங்கள். கிச்சன் வாஷிங் சிங்கில் அடைப்பு ஏற்பட்டால் இரவு கொதிக்கும் நீரை ஊற்றி சிறிதளவு உப்பை அதில் போடவும்.

அது அடைப்பை சரிசெய்யும். கோதுமை மாவில் வண்டுகள் வராமலிருக்க மாவுக்கு ஏற்றவாறு தூள் உப்பு சேர்த்து கிளறி வைத்தால் வண்டுகள் வராது. ஆடை அலசும் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து அதில் ஊற வைத்து பிறகு அலசினால் ஆடையில் அதிக அளவு சாயம் போகாது. இவ்வாறு உப்பு வீட்டில் பயன்படுகிறது.

Categories

Tech |