டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதற்கு வாகனங்களில் இருந்து அதிகமாக வெளியேறும் புகையே முக்கிய காரணம். இதனை குறைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் மாநில அரசு உள்ளது. எனவே சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக டெல்லி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடுத்த படியாக வாகனங்களின் மூலம் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க புதிய திட்டத்தை கொண்டு வரவுள்ளது.
இது தொடர்பாக பேசிய அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், ஆக.25க்கு பிறகு வாகனங்களுக்கு மாசு சான்றிதழ் இல்லையென்றால் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் போட முடியாது என்று தெரிவித்துள்ளார். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகுமாம்.