இந்தியாவின் சில்லறை கட்டண சேவை நிறுவனமான நேஷ்னல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, யுபிஐ நெட்வொர்க் உடன் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைப்பதை ஓரிரு மாதங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை தலைமை நிர்வாகி திலீப் அஸ்பே வெளியிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் கிரெடிட் கார்டுகளை யுபிஐ அமைப்புடன் இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது .இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வணிகர்கள் கார்டுகளுக்கு பதிலாக யூபிஐ மூலம் பணம் செலுத்துவதை விரும்புகிறார்கள். பெரும்பாலான மக்கள் இதைதான் பயன்படுத்தி வருகிறார்கள்.
MDR என்பது வங்கி, கார்டு நெட்வொர்க் மற்றும் ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கு விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் கொள்முதல்களுக்கான கட்டண நுழைவாயில்களுக்கு வணிகர் செலுத்தும் கட்டணமாகும். இதன் மூலம் வணிகர்களை நாங்கள் கவனித்து எம்டியாரில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும், கிரெடிட் கார்டு சேவையில் வணிகர்கள் தொடர்ந்து பணம் செலுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.