Categories
உலகசெய்திகள்

அடடே இது நல்லா இருக்கே….. வேலையே செய்யாமல் 1 மணி நேரத்துக்கு ரூ.6600…. இப்படியுமா…..????

ஜப்பானை சேர்ந்த ஷோஜி மோரிமோடோ (36) என்ற இளைஞர் சும்மா இருப்பதே ஒரு வேலையாக செய்து வருகிறார். எந்த வேலையும் செய்ய பிடிக்காது அவர் Do nothing என்ற twitter பேசை தொடங்கியுள்ளார்.தனியாக உணவகம் மற்றும் தியேட்டர் செல்ல வெட்கப்படுபவர்களுக்கு துணையாக சென்று வருவது, அவர்களது சுக துக்கங்களை காது கொடுத்து கேட்பது ஆகியவற்றை கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு வேலையாக செய்து வருகிறார்.

இதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.6,600 கட்டணமாக வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 4000 முறை இதுபோல சேவை வழங்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஷோஜியை சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானவர்கள் பின் தொடருகின்றனர். இவர்கள்தான் அவருக்கு  வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் வருகின்றனர்.

Categories

Tech |