திமுக பிரமுகர் அபகரித்த சொத்தை மீட்டுத்தரக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் இடமே மனு கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில் திமுக பிரமுகர் அபகரித்த சொத்தை மீட்டுத்தரக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் இடமே மனு கொடுக்க வந்த சம்பவம் நடந்துள்ளது. நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரை சேர்ந்த வசந்தி என்ற பெண் அளித்த மனுவில், “வேளாங்கண்ணி பூக்கார தொகுதியில் அமைந்துள்ள 39 சென்ட் நிலத்தை கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் அல்வா எடிசன் அபகரித்து விட்டார். நிலத்தை திரும்ப பெற உதவி செய்ய வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.