Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடடே! இது வேற லெவல்…. முதியோர் உதவித் தொகையை உயர்த்திய முதல்வர்…. எவ்வளவு தெரியுமா…..? வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

முதியோர் உதவி தொகையை அதிகரிக்கப் போவதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று 7-ம் நாள் சட்டப்பேரவை கூடியது. இந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது எதிர் கட்சி தலைவர் சிவா முதியோர் உதவித்தொகை மற்றும் விதவைப் பெண்களுக்கான உதவி தொகை வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்று கூட தெரியவில்லை. உதவித்தொகை கிடைக்காமல் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று கூறினார்.

இதற்கு முதல்வர்,‌ முதியோர் மற்றும் விதவைப் பெண்கள் உள்ளிட்ட உதவித்தொகைகளை பெற 15 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த உதவி தொகை அடுத்த மாதம் முதல் வழங்கப்படும். அதன்பிறகு 100 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு ரூபாய் 7000 ஆக உதவி தொகை உயர்த்தப்படுவதோடு, 90 வயது முதல் 100 வயது வரை உள்ள முதியவர்களுக்கு உதவி தொகை 4500 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார்.

Categories

Tech |