புனேவை சேர்ந்த 45 வயதான ப்ரீத்தி மாஸ்கே லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான லேவிலிருந்து மணிலா வரை சுமார் 55 மணி நேரம் 13 நிமிடங்களில் தனியாக சைக்கிள் ஓட்டிய முதல் பெண்மணி எனும் சாதனையை படைத்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிரீத்தி 430 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் உலக சாதனையில் தேவைகளை பூர்த்தி செய்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 8000 மீட்டர் உயரம் கொண்ட இந்த பாதை மிகவும் கடினமானது.
மேலும் பலத்த காற்று, பனி பொழிவு மற்றும் உறைபனியில் வெப்பநிலை உள்பட மாறுபட்ட கால நிலையில் அவர் சைக்கிள் ஓட்ட வேண்டியிருந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மூச்சுத்திணறல் காரணமாக இரண்டு முறை ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்தினேன் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். தனக்கு இருந்த நோய் பாதிப்பை சமாளிக்க 40 வயதில் நான் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன் என கூறும் அவர் ஒருவரின் ஆர்வத்திற்கு வயது என்பது ஒரு தடையில்லை என தெரிவித்துள்ளார். என் பயத்தை என்னால் வெல்ல முடிந்தால் எந்த பெண்ணாலும் இது முடியுமென அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.