Categories
Tech டெக்னாலஜி

அடடே இது வேற லெவல்…. வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு வசதியா?…. அசத்தலான அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள whatsapp நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அது பயனாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப் தங்கள் பயனர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களில் சாட் ஹிஸ்டரியை பேக்கப் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளது.

இதற்கு முன்னதாக வாட்ஸ்அப் அல்லது டேப் மூலம் ஒரே நேரத்தில் ஒன்று இருக்கும் மேற்பட்ட சாதனங்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம். ஆனால் இரண்டு மொபைல்களில் சாட் ஹிஸ்டரியுடன் பயன்படுத்த முடியாது. தற்போது பேக்கப் செய்யவும், இரண்டுக்கும் மேற்பட்ட செல்போன்களில் பயன்படுத்தவும் அப்டேட் கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய அப்டேட் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |