நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ஜெயிலர் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் சென்னையில் துவங்கியுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், சந்தோஷ் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். தமன்னா இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை எண்ணூர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாகம், இதில் ரஜினிகாந்த் குடிவிட்டு தள்ளாடியப்படி நடப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. இந்த படம் தொடர்பாக வெளியாகிவரும் அப்டேட்டுகளால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் ரஜினிகாந்த் லுக்கில் உருவாக்கப்பட்டுள்ள விநாயகர்சிலை ரசிகர்களை கவர்ந்து வருகிறது. வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தியின்போது அந்த ஆண்டில் பிரபலமாகும் கேரக்டர்கள் வடிவில் பிள்ளையார் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. பாகுபலி திரைப்படம் வெளியானபோது பாகுபலி பிள்ளையார் பிரபலமனார். நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த வருடம் அல்லு அர்ஜுனின் புஷ்ப ராஜ் ஸ்டைலில் பிள்ளையார் சிலைகள் உருவாக்கப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெயிலர் ரஜினிகாந்த் ஸ்டைலில் பிள்ளையார் சிலை உருவாக்கப்பட்டு இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.