Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. “இந்தியன் 2” படக்குழுவினருடன்…. தனது பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகர்….!!!!

நடிகர் பாபி சிம்ஹா தனது பிறந்தநாளை இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும், “இந்தியன் 2” படத்தில் நடித்து வருகின்றார் நடிகர் பாபி சிம்ஹா. இவர் பீட்சா, சூது கவ்வும், நேரம், ஜிகிர்தண்டா மற்றும் இறைவி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் “ஜிகிர்தண்டா” படத்தில் அசால்ட் சேதுவாக நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது. இது மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை பாபி சிம்ஹா “இந்தியன் 2” படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, “இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியதில் பெரு மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |