2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியாவில் மட்டும் 5 கோடியே 30 லட்சம் கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கவுன்டர்பாயின்ட் என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. அதில் இந்திய நாட்டில் தற்போதைய 2020 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் 25 சதவீதம் சந்தை மதிப்புகளை உள்ளடக்கிய சாம்சங் நிறுவனம் மொபைல் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து 23% விழுக்காடு சந்தை மதிப்பைப் பெற்று சீன நிறுவனமான சியோமி உள்ளது.
இந்தியா முழுமைக்கும் இந்த மூன்றாம் காலாண்டில் 5 கோடியே 30 லட்சம் கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தனது ஆய்வறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விவோ நிறுவனம் முன்பை விட நான்கு மடங்கு வளர்ச்சி கண்டு சந்தையின் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளதாகவும், ரியல்மீ – ஓப்போ நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் உள்ளதாகவும் ஆய்வறிக்கை சொல்கிறது. அதேபோல ஒன் பிளஸ் சந்தை மதிப்பு ஆப்பிள் நிறுவனத்துக்கு நிகராக வளர்ந்து வருகின்றது எனவும் தனது ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.