நேரடியாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு மாநகரம் என்ற படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமானார் .இந்த படம் மிகப்பெரும் வெற்றியை கொடுத்தது .இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷான்,ரெஜினா கசான்ட்ரா,சார்லி மற்றும் ராம்தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.
இளைஞர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை ஒரே புள்ளியில் சந்திப்பதை மையமாகக்கொண்டு மாநகரம் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.மேலும் இத்திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு, மும்பைகர் என்ற பெயரில் இந்தியில் வெளியாக உள்ளது. மும்பைகர் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும், இப்படம் ரிலீசுக்கு தயாராகி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.