Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! இந்தி ரீமேக் “விக்ரம் வேதா” வசூல்…. இவ்வளவு மோசமா….?

“விக்ரம் வேதா” படத்திற்கு இவ்வளவு குறைவான வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் வருத்தம்.

தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த “விக்ரம் வேதா” திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்து திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி இணைந்து இந்தியிலும் இயக்கியுள்ளார்கள். இந்தி ரீமேக் “விக்ரம் வேதா” படத்தில் ஹிருத்திக் ரோஷன், சயிஃப் அலி கான் மற்றும் ராதிகா ஆப்தே போன்ற நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள். கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழில் எடுக்கப்பட்ட “விக்ரம் வேதா” படத்தை அப்படியே 99 % மாறாமல் சீன் பை சீனாக சொல்லும் அளவிற்கு இந்தி ரீமேக் செய்துள்ளார்கள்.

இந்திப் படத்திற்காக கொஞ்சம் செலவு அதிகம் செய்து சண்டை காட்சிகளை எடுத்துள்ளார்கள். மேலும் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளார்கள். இதனை தொடர்ந்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தமிழில் வெளியிடப்பட்டுள்ள “விக்ரம் வேதா” -வை காட்டிலும் சிறப்பாக இருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. தமிழ் ஆடியன்ஸ் பலரும் இந்தியை விட தமிழில் வெளியானது சிறப்பாக இருந்ததாக சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தார்கள். இருப்பினும் ஹிருத்திக் ரோஷனின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர். மிரட்டலான நடிப்பை அவர் கொடுத்திருந்ததாக விமர்சகர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.

மேலும் முதல் மூன்று நாட்கள் நல்ல வசூலை படம் கொடுத்தது. இந்நிலையில் படத்திற்கு திங்கள் கிழமை முதல் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காதது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “விக்ரம் வேதா” படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நல்ல வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காம் நாளான நேற்று ₹ 5.75 கோடி வசூலித்துள்ளது. இது முந்தைய மூன்று நாளோடு ஒப்படைகையில் 45 சதவீதம் குறைவான வசூலாகும். மேலும் திங்கள்கிழமை வசூலில் சர்ச்சை சரிவு இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

இருப்பினும் எதிர்பார்த்ததை விட வசூல் சரிவை சந்தித்தது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி விக்ரம் வேதா படம் ஒரு வாரம் முடிவில் ரூபாய் 60 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. “விக்ரம் வேதா” படத்திற்கு இவ்வளவு குறைவான வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று சினிமா வர்த்தகம் நிபுணர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். நவராத்திரி பூஜையால் குடும்பத்தினர் திரையரங்குகள் பக்கம் வராமல் இருப்பதும் ஒரு காரணம் என சொல்லப்படுகின்றது.  புதன்கிழமை அன்று திரைப்படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வர்த்தக நிபுணர்கள் மீண்டும் கணித்துள்ளனர்.

ஹிருத்திக் ரோஷனின் முந்தைய படங்களான “வார்” மற்றும் “பேங் பேங்” இரண்டும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் “விக்ரம் வேதா” படம் வசூலில் தடுமாறி வருவது பட குழுவினருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே யூடியூபர் ஆஷிஷ் சஞ்சலானியுடன் instagram நேரலையில் தோன்றிய ஹிருத்திக் ரோஷன் “விக்ரம் வேதா” படம் குறித்து பேசியுள்ளார். இந்தப் படத்திற்கு வரம் ரியாக்ஷங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஹிருத்திக் ரோஷன் கூறியதாவது, ” நான் கொஞ்சம் குழப்பமாக இருக்கின்றேன். அதே சமயம் படத்தைக் கண்டு நான் மிகவும் திருப்தி அடைகின்றேன் என்ற மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நாங்கள் அதை வேடிக்கையாக செய்தோம். நான் நிறைய கற்றுக் கொண்டேன். படத்தை முழுமையாக முடித்ததில் நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். உலகம் நிறைய விஷயங்களை சொல்கின்றது அவைகளில் பெரும்பாலும் நல்லதும் இருக்கின்றது. நான் அதை மெதுவாக உள்வாங்கிக் கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு படமும் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டியதில்லை ஒரு சூப்பர் ஹீரோ படமாக என்னுடைய “வார்” அல்லது “பேங் பேங்” படம் மாதிரியாகவோ கூட இருக்கலாம் என்றும் நாம் எப்போதும் மிகவும் புத்திசாலியாக இருக்க வேண்டியதில்லை பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டும். நான் நட்சத்திர அந்தஸ்தை ஒரு பொறுப்பாக பார்க்கின்றேன். அதை நான் ஆடம்பரமாக பார்க்கவில்லை”என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |