ஒரு சிறுவன் தன்னுடைய கிராமத்தை பஞ்சத்தில் இருந்து காப்பாற்றி பசுமையாக மாற்றியுள்ளார். அதாவது ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள மல்லாவி என்ற கிராமத்தில் கடந்த 2000-2001-ல் வறட்சி காரணமாக கடுமையான பஞ்சம் நிலவியுள்ளது. இதனால் மக்கள் உணவுக்காக கடுமையாக சண்டை போட்டுள்ளனர். ஆனால் சிலர் உணவு கிடைக்காமல் இறந்து விட்டனர். அப்போதுதான் வில்லியம் கம்குவாம்பா என்ற சிறுவன் சரிவர படிக்காததால் பள்ளியில் இருந்து நீக்கம் செய்துள்ளனர். அந்த சிறுவன் வீட்டில் இருக்கும் போது திடீரென அவருக்கு தான் படித்த காத்தாடி பற்றி ஞாபகம் வந்துள்ளது. இதனால் அந்த சிறுவன் காத்தாடி பற்றிய முழு விபரங்களையும் நூலகத்தில் சென்று படித்துள்ளார்.
இதனையடுத்து சிறுவன் தனக்கு கிடைத்த கம்புகள் மற்றும் சைக்கிள் டயர் போன்றவற்றை வைத்து ஒரு நீளமான காத்தாடியை உருவாக்கியுள்ளார். அந்த காத்தாடியின் மூலம் கிணறுகள் மற்றும் ஊற்றுகளில் இருக்கும் தண்ணீரை வெளியில் எடுத்தார். இதனால் பஞ்சம் குறைய தொடங்கியுள்ளது. அந்த சிறுவனைப் பற்றி தெரிந்து கொண்ட அமெரிக்கா வில்லியமை படிக்க வைத்துள்ளனர். இவரைப் பற்றிய புகழ் உலகமெங்கும் பரவியதால் பலர் வில்லியமிற்கு உதவி செய்துள்ளனர். இவரின் முயற்சியால் தன்னுடைய வறண்டு போன ஊரையே பசுமையாக மாற்றியுள்ளார். இவர் ஆப்பிரிக்காவில் 200-க்கும் அதிகமான காற்றாடிகளை வைத்துள்ளார். மேலும் வில்லியமால் கட்டப்பட்ட பள்ளிகளில் 1,000-க்கும் அதிகமான மாணவ- மாணவிகள் இலவசமாக படிக்கின்றனர்.