நாய் ஒன்று தனது எஜமானரை போல காலில் அடிபட்டது போல் அனுதாபத்தை பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக நாய்கள் என்றாலே நன்றியுள்ள ஜீவனாக இருக்கும். மேலும் வளர்பவர்களோடு இணைந்து நண்பர்கள் போலவே பழகி விடும். இந்நிலையில் லண்டனை சேர்ந்த ரசெல் ஜோன்காலிஸ் என்பவருக்கு காலில் அடிபட்டுள்ளது. இந்நிலையில் தனது நாயுடன் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதையடுத்து நடைப்பயிற்சியின் போது தனது எஜமானர் கஷ்டப்படுவதை பார்த்த நாய், தனது காலிலும் அடிபட்டது போல நடந்து கொண்டுள்ளது.
இதையடுத்து அவர் நிஜமாகவே, நாய்க்கு அடிபட்டு விட்டதோ என்று நினைத்து தனது நண்பரின் உதவியுடன் நாயை மருத்துவனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நாய்க்கு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது தான் அவருக்கு உண்மை தெரியவந்ததுள்ளது. அப்போது தான் நாய்க்கு அடிபடவில்லை தனது அனுதாபத்தை பெறுவதற்காகவே அடிபட்டது போன்று நடந்து கொண்டதை அவர் உணர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.