Categories
மாநில செய்திகள்

அடடே….! “இந்த 8 மாசத்துல இவ்வளவு செஞ்சுருக்காரா”….  சி.எம். கொடுத்த ரிப்போர்ட் கார்டு….!!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தான் பொறுப்பேற்ற பிறகு செய்த விஷயங்கள் தொடர்பான ரிப்போர்ட்டை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

திமுக அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொறுப்பேற்றுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவராக இருந்த முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தான் பொறுப்பேற்றது முதல் செய்த விஷயங்கள் தொடர்பான ரிப்போர்ட் கார்டை தற்போது வெளியிட்டுள்ளார்.

‘எட்டு மாதங்களில் ஏற்றமிகு சாதனைகள்’ என்ற தலைப்பில் அவர் ரிப்போர்ட் கார்டை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் அவர் தெரிவித்துள்ளதாவது: ” கடந்த மே 7 ஆம் நாள் உங்களது அன்பான உத்தரவுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். வாக்களித்தவர்க்கு மட்டுமல்ல – வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்ந்து நான் முதலமைச்சராக இருப்பேன்’-என்று உறுதி எடுத்துக்கொண்டேன். பொறுப்பேற்றுக்கொண்ட உடனே ஐந்து முக்கியமான வாக்குறுதிகள நிறைவேற்ற நான் கையெழுத்திட்டேன்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்ற மக்களோட துயரத்தை போக்குகின்ற வகையில், அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கின்ற குடும்பத்துக்கு தலா 4000 ஆயிரம் ரூபாய் தரப்படும். அதில் முதல் கட்டமாக 2000 ரூபாய் இந்த மே மாதத்துலயே வழங்கப்படும் என்கிற முதல் கையெழுத்திட்டேன். ஆவின் பால் விலையை, லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்வதற்கான அரசாணையில் இரண்டாவது கையெழுத்து.

அரசு கட்டுப்பாட்டில் இயங்குகின்ற நகரப் பேருந்துகளில், பெண்கள் கட்டணம் இல்லாம பயணம் செய்வதற்கான உத்தரவில் மூன்றாவது கையெழுத்து. தொகுதிகள் தோறும் நான் பெற்ற மனுக்கள் மேல் நடவடிக்கை எடுக்க, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்கிற திட்டத்தின் கீழ், புதிய துறையை உருவாக்குவதற்கான உத்தரவில் நான்காவது கையெழுத்து. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்பவகளின் இன்னலைக் குறைக்கின்ற வகையில், அதுக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத்திட்டத்தில் ஏற்கும் என்பதற்கான ஐந்தாவது கையெழுத்தை போட்டுள்ளேன்.

இப்படி ஒவ்வொரு நாளிலும் மக்களுக்காக நான் போட்டக் கையெழுத்துப் பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம். கோடிக்கணக்கான மக்களின் தேவையை – லட்சக்கணக்கான மக்களின் எதிர்ப்பார்ப்பை – ஒற்றைக் கையெழுத்தில் நிறைவேற்றிக் காட்டிய அரசுதான் இந்த அரசு. தேர்தலுக்கு முன்னால், தமிழ்நாடு முழுவதும் சுற்றி நான் பெற்ற மனுக்களில் இரண்டரை லட்சம் மனுக்களை 100 நாட்களில் நிறைவேற்றிக் கொடுத்துள்ளேன்.

கொரோனா நிவாரண நிதி 4 ஆயிரம் ரூபாயை 2.15 கோடிக் குடும்பங்கள் பெற்றுள்ளார்கள். கொரோனா கால நிவாரணமாக 13 பொருட்களை 2.15 கோடி குடும்பங்கள் பெற்றுள்ளார்கள். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 50 லட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள். இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் 80 ஆயிரத்து 138 இல்லம் தேடி கல்வி மையங்களை தொடங்கி யிருக்கிறோம். பள்ளிக் கூடத்துக்கு வராமல் நின்ற குழந்தைகளில், 1 லட்சத்து 73 ஆயிரத்து 792 குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு திரும்ப சேர்த்திருக்கிறோம். 18.30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 பவுனுக்கு கீழே நகைக் கடன் பெற்ற 13.50 லட்சம் குடும்பங்களுக்கு கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோட்டையில் உட்கார்ந்து உத்தரவுபோடும் முதலமைச்சர் அல்லநான். மக்களோடு மக்களாக இருந்து அவர்கள் சிந்தனைகளை உணர்ந்து அறிந்து செயல்படுத்திக்காட்டும் முதலமைச்சராகச் செயல்பட்டு வருகிறேன். கொரோனாகாலமா? கொரோனாவார்டுக்குள் சென்று நோயாளிகளைக் கவனித்தேன். மழைவெள்ளமா? இடுப்பளவு தண்ணீரிலும் போய் மக்களைச்சந்தித்தேன். காஞ்சிபுரத்திலும், கன்னியாகுமரியிலும் எனது கால்கள் பயணித்தது. திருவள்ளூரிலும், திருப்பூரிலும் நான்வலம் வந்தேன்.

தஞ்சையிலும், திருச்சியிலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கொடுத்துவிட்டு இரவில் சென்னைக்குத் திரும்பிய நான் கொட்டும் மழையில் சென்னை இருப்பதைக் கண்டு அன்றைய நாள் நள்ளிரவு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பராமரிப்புப் பணிகளை முடுக்கி விட்டு நள்ளிரவு 2 மணிக்குத்தான் வீடு திரும்பினேன். மறுநாள் காலையில் மீண்டும் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிடச் சென்றேன். காவல் நிலையத்தில் மக்கள் குறை தீர்க்கப்படுகிறதா என நானே காவல் நிலையத்திற்குப்போய் பார்வையிட்டுள்ளேன்.

என்னை இப்படித்தான் பழக்கி இருக்கிறார் தமிழினத்தலைவர் கலைஞர். மக்களோடு வாழ் என்று சொன்னார் பேரறிஞர்அண்ணா. அப்படித்தான் வாழ்ந்து வருகிறேன். மக்களின் நேற்றைய தேவையை இன்று நிறைவேற்றித்தருபவனாக இருக்கிறேன். நாளையகோரிக்கையை இன்று உணர்பவனாக இருக்கிறேன். ஏனென்றால் நான் மக்களோடு மக்களாக இருக்கிறேன். உங்களுக்காகவே உழைக்கிறேன். உழைத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு உழைக்கவே காத்திருக்கிறேன்.” என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.

Categories

Tech |