Categories
மாநில செய்திகள்

அடடே…! இனி இவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு…? வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று 2021 டிசம்பர் மாதத்தில் முதல் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே ஆசிரியர்கள், பென்ஷன் தாரர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 14 சதவீதம் அதிகரிக்கபடுவதாக அறிவிக்கப் பட்டது. இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்ந்தது. இதனையடுத்து 2022 ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது போன்று நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |