உலகில் இன்று பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன்களில் வீடியோக்களை எடுத்து யூடியூப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதன் வாயிலாக வருமானமும் ஈட்டுகின்றனர். இதன் காரணமாக வீடியோ எடுப்பது, எடிட் செய்வது போன்றவை இப்போது அடிப்படியாக எல்லோரும் பயன்படுத்தும் திறனாக இருக்கிறது. இந்த நிலையில் சாதாரண மக்கள் வீடியோ எடிட் செய்வதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன் வீடியோ எடிட்டர் மென் பொருளான ‘clipchamp’-ஐ விண்டோஸ் 11 ஓஎஸ்ஸுடன் வழங்கப் போவதாக அறிவித்து இருக்கிறது.
பழைய விண்டோஸ் பயனர்கள் மைக்ரோசாஃப்ட் ஸ்டோருக்கு சென்று கிளிப்சேம்பை தர விறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருளுடன் பெரும்பாலான ராயல்டி இல்லாத வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்கள் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதில் அஜூர் நிறுவனத்தின் துணைக் கொண்டு உருவாக்கப்பட்ட டெக்ஸ்ட் டூ ஸ்பீச் ஜெனரேட்டரும் இடம் பெற்றுள்ளது. இதன் வாயிலாக யாருடைய உதவியும் இன்றி 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் வாய்ஸ் ஓவர்கள் உருவாக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.