Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அடடே…! இப்படி எளிமையான முதல்வரா ? காமராஜர், கக்கனோடு ஒப்பிட்ட திருமா …!!

திரிபுராவில் நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையை கண்டிக்கின்றோம் என்ற பெயரில் திரிபுராவில் விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பு. தமிழ்நாட்டில் கூட நீங்கள் அந்த பெயரை கேள்விப்பட்டிருப்பீர்கள். விசுவம் என்றால் உலகம். இந்து பரிசத் உலக இந்து பேரவை தமிழில்…. அகில உலக இந்து பேரவை, அந்த இயக்கம் சங்பரிவார் இயக்கம். நான் அடிக்கடி மேடையில் கூறி இருக்கிறேன் சங்பரிவார் இயக்கம் என்றால் ஆர்எஸ்எஸ் குடும்ப அமைப்புகள்.

சங்க் என்பது ஆர்எஸ்எஸ் ஐ குறிக்கும், பரிவார் என்பது குடும்பத்தை குறிக்கும். ஆகையால் சங்பரிவார் என்பது ஆர்எஸ்எஸ் குடும்ப அமைப்புகள். விஷ்வ இந்து பரிஷத் அதில் ஒரு அமைப்பு. பஜ்ரங்தள்  அப்படி என்றால் அனுமன் சேனை  என்று குறிக்கும். அது ஒரு ஆர்எஸ்எஸ் குடும்ப அமைப்பு. இவர்கள்தான் வங்கதேசத்தில் நடந்த வன்முறையை கண்டித்து பேரணி நடத்துகிறோம் என்ற பெயரில் பேரணியின்போது வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினார்கள்.

மசூதிகள் அடித்து நொறுக்கப்பட்டன, இஸ்லாமியர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன. உங்களுக்கு தெரியும் எவ்வாறு வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள் என்று….  திரிபுரா மாநிலத்தில் 70% வங்கதேசத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் தான் வசிக்கிறார்கள் என்று புள்ளி விவரம் சொல்கிறது.

வங்காளிகள் அதுல 80,90 விழுக்காடு இந்துக்கள் என்று சொல்லப்படுகிறது. அங்கிருந்து வந்து குடியேறியவர்களில் அதிகம் இந்துக்கள். வங்க தேசத்தில் இருந்து இந்துக்கள் திரிபுராவிற்கு  வந்திருக்கிறார்கள். திரிபுரா மாநிலத்தில் குடியேறி இருக்கிறார்கள். வங்காளிகள் வந்திருக்கிறார்கள், அதில் இந்துக்கள் அல்லாதவர்களும் உண்டு. ஆனால் இந்துக்கள் பெரும்பான்மை. அந்த மாநிலத்தின் பூர்வீக குடிகள் பழங்குடிகள் அவர்களும் இந்துக்கள்தான். பழங்குடியினர் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்த கூடிய ஒரு அமைப்பு பழங்குடி மக்களின் மீட்சிக்காக போராடக்கூடிய அமைப்பு என்கிற முறையில் கம்யூனிஸ்ட் கட்சி அங்கு வேர் கொண்டது, வழு கொண்டது.

இதனால் ஆட்சியை கைப்பற்றி,  நிரூபன் சக்கரவர்த்தி 10 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்தார். அவர் பதவியை விட்டு வெளியேறும்போது, எப்படி அவர் வெளியேறினார். என்பதை அண்ணன் முத்தரசன் போன்றோர்கள் இங்கே விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். முதலமைச்சர் பதவியில் இருந்த போதிலும் கூட, உடுத்த உடையுடன் வேட்டி துண்டு, வேட்டி சட்டையோடு வேறு எந்த உடமையும் இல்லாமல் வெளியேறக் கூடிய அளவுக்கு எளிமையான ஊழலுக்கு இடம் கொடுக்காத, நேர்மையான ஆளுமைகள் நிரூபன் சக்ரவர்த்தியை உலகமே இன்று கொண்டாடுகிறது.

எப்படி பெருந்தலைவர் காமராஜரை பற்றி நாம் பேசுகிறோமோ, எப்படி அவருக்கு உறுதுணையாக இருந்த கக்கனார் அவர்களைப் பற்றி பேசுகிறோமோ, அந்த 1 ,2 பேரைத் தவிர தமிழ்நாட்டு வேற யாரும் சொல்ல முடியாது என்ற அளவிற்கு அதிகாரத்தில் இருந்தவர்கள்…..  அதிகாரத்தில் இல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், இன்னும் பிற கட்சிகளை சார்ந்த தலைவர்களும் எளிமையாக இருக்கிறார்கள் என்பது வேறு. அதிகாரத்தில் இருந்தும் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர், உள்துறை அமைச்சர் தூயவர் கக்கனார். ஆனால் அவர்கள் பதவியில் இருந்து வெளியேறும் போது, வெறும் கையோடு வெளியேறினார்கள். கலங்கம் இல்லாமல் வெளியேறினார்கள். மாசுபடாமல் வெளியேறினார்கள். மாசு மறுவற்ற மா மனிதர்களாக வெளியேறினார்கள். அப்படிதான் திரிபுராவில் நிரூபன் சக்கரவர்த்தி.

அவர்தான் அப்படி என்றால் அவருக்கு அடுத்து வந்தவர் தேவ் தசரத தேவ், 5 ஆண்டுகள் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஒரு போராளி. அந்த மண்ணின் மைந்தன் பூர்வீக குடி அவரைத் தொடர்ந்து மாணிக் சர்க்கார். அவர் 20 ஆண்டுகள் எந்த அளவிற்கு பொதுவுடமை இயக்கத்தின் மீதும் பழங்குடி மக்கள் நம்பிக்கை மேலோங்கி இருந்தது என்பதற்கு இது ஒரு சான்று என விளக்கினார்.

Categories

Tech |