மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் குவாலியர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக பிரதுமான் சிங் தோமர் இருந்து வருகிறார். இவர் அந்த மாநில எரிசக்தி துறை அமைச்சராகவும் உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சட்டப்பேரவை தொகுதிக்கு சென்ற சாலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சாலைகள் மிக மோசமான நிலையில் இருப்பதை அறிந்த அவர் பொதுமக்களிடம் இது குறித்து கேட்டபோது சாலைகளை கவனிப்பாரின்றி கிடக்கின்றது. அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்ட அவர் உங்களின் நிலை சீராகும் வரை வெறும் காலுடன் இருக்கவும், பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் நடப்பதாக அமைச்சர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.