ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்று ‘தேங்க் யூ’ மற்றும் ‘ப்ளீஸ்’ ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குகிறது. இந்த உணவகம் ஹைதராபாத்தின் கஜகுடா பகுதியில் தக்ஷின் என்ற பெயரில் இயங்கி வருகிறது.
இந்த உணவகத்திற்கு வரும் கஸ்டமர்கள் ப்ளீஸ் மற்றும் தேங்க்யூ என்ற வார்த்தைகளை பயன்படுத்தினால், ரூ.35 வரை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் இந்த உணவகத்துக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.