நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாரத் பெட்ரோல் பங்க் இயங்கிவருகிறது. இந்த பங்கில் புத்தாண்டை முன்னிட்டு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் செலுத்தி கொள்பவர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் விலை குறைப்பு என அறிவிக்கப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் வந்து பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பி செல்கின்றனர். மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் ராசிபுரத்தில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க் பங்கின் விலை குறைப்பு செய்யப்பட்டால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.