Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடடே! இப்படி ஒரு கவுன்சிலரா….? 100 நாளில் எவ்வளவு செய்திருக்கிறார்….. பொதுமக்களை வியக்க வைக்கும் சம்பவம்….!!!

கவுன்சிலராக பதவி ஏற்ற நாளில் இருந்து தொகுதிக்கு செய்த நல்ல திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்ற மேயர் பதவியை கைப்பற்றியது. இந்நிலையில் கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனால் 44-வது கோட்டத்தில் கவுன்சிலராக வி.சி.க கட்சியை சேர்ந்த ஜெ.மு. இமயவர்மன் பதவி ஏற்றார். இவர் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக ஜெ.மு. இமயவரம்பன் ஒரு பிரசுரத்தை தயார் செய்து வீடு வீடாக சென்று கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய தொகுதியான 44-வது கோட்டத்தில் செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர் பதவி ஏற்ற நாளில் இருந்து 44-வது கோட்டத்தில் உள்ள 20 இடங்களை மேயர் 3 முறையும், மாநகராட்சி ஆணையர் 2 முறையும், மண்டல குழு தலைவர் 3 முறையும் ஆய்வு செய்துள்ளார். அதன்பிறகு அந்தேரிப்பட்டி குட்டை வாழ் பகுதியில் வசிக்கும் 491 பேருக்கு பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு கஸ்தூரிபாய் தெருவில் உள்ள சின்னமாரியம்மன் கோவில் மற்றும் பெரிய மாரியம்மன் கோவில் அருகில் தண்ணீர் டேங்க் வைக்கப்பட்டுள்ளது. இதே தெருவில் ரூபாய் 25 லட்சம் செலவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குப்பைமேடு ஹவுசிங் போர்டு பகுதியில் வசிக்கும் 50 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து எருமைபாளயம் நடுநிலைப் பள்ளியில் 3.30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பென்ச் மற்றும் டெஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மாநகராட்சியில் தினக்கூலியாக வேலை பார்த்துவரும் 350 பேருக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்குவதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சட்டமன்றத்திற்கு ஒரு விளையாட்டு மைதானம் என்ற அறிவிப்பின்படி மேயர் மூலமாக விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான தீர்மானம் போடப்பட்டுள்ளது. மேலும் 44-வது தொகுதியில் உள்ள அனைத்து மின் விளக்குகலும் பராமரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தேரிப்பட்டி பகுதியில் 35 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சாலை அமைக்கப்படுவதாகவும், பல்வேறு பகுதிகளில் சாலைகள், சுடுகாடு, குடிநீர், பூங்கா மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |