பாகிஸ்தான் நாட்டில் திருமண தம்பதிக்கு ஒருவர் ஹெலிகாப்டரில் வந்து திருமண பரிசு கொடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம் எல்லோருக்கும் திருமணம் என்றால் நினைவுக்கு வருவது சாப்பாடு, ஆசீர்வாதம், மலர் தூவுவது மற்றும் மொய் பணம் ஆகியவை தான் நினைவுக்கு வரும்.ஆனால் பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில் மண்டி பகுவாஸ்டின் மாவட்டத்தில் ஒருவர் இளம் தம்பதிக்கு திருமண பரிசு கொடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த திருமணத்தில் மாப்பிள்ளையின் சகோதரர் தன் அண்ணனுக்கு சுவாரஸ்யமான பரிசை தரவேண்டும் என்று நினைத்துள்ளார் . இதனால் ஒரு ஹெலிக்காபட்டாரில் ரோஜா இதழ்கள் மற்றும் பணமும் எடுத்துச்சென்று மணமக்கள் மீது மேலே இருந்து தூவினார்.இதில் பூக்களுடன் பணமும் சேர்ந்து கொட்டியுள்ளது. இதனால் மணமக்கள், உறவினர்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.