ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் விடுமுறை கேட்டால் மேலதிகாரிகளுக்கு கோபம் தான். ஏனென்றால் பணி பாதிக்குமே என்று கோபப்படுவார்கள். ஆனால் இங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் அனுப்பிய விடுமுறை கடிதத்தை மேலதிகாரி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த விடுமுறை கடிதத்தில், அன்புள்ள ஐயா, இந்த மின்னஞ்சலை நான் உங்களுக்கு அனுப்புவதற்கு காரணம் என்னவென்றால் எனக்கு என்று ஒரு நாள் விடுமுறை வேண்டும்.
ஏனென்றால் மற்றொரு நிறுவனத்தில் நேர்காணலுக்கு செல்ல வேண்டியிருப்பதால் விடுமுறை தேவைப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளத. இதனை பகிர்ந்த மேலதிகாரி ஷகில், எனது ஊழியர்கள் மிகவும் இனிமையானவர்கள், நேர்காணல்கள் செல்ல வேண்டும் என்று கூறி விடுமுறை கேட்டுள்ளார் என்று தனது கருத்தை பதிவிட்டு மின்னஞ்சலின் புகைப்படத்தை இணைத்துள்ளார். இந்த விடுமுறை கடிதம் வைரலாக பரவி வருகிறது.