Categories
Uncategorized மாநில செய்திகள்

அடடே..! இம்புட்டு திட்டமா ? அசரடித்த திமுக…. பட்டியலை அடுக்கிய ஸ்டாலின் …!!

கோவை அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  மக்கள் மாநாட்டின் வாயிலாக கோவை மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை தொடங்கி வைப்பதில்,  அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு 1,132 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்ட பணிகள் விரைவில் துவங்கும் என்பதையும் நான் தெரிவிக்கின்றேன்.

மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சீராக குடிநீர் வழங்குவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது, 10ஆண்டுகளுக்கு முன்பு  திமுக ஆட்சி காலத்தில் தான் கோவை மாநகர் பகுதியில் திட்ட சாலைகள் அமைக்கப்பட்டன. கடந்த ஆட்சி காலத்தில் எந்த ஒரு திட்ட சாலை பணியும் மேற்கொள்ளபடவில்லை.

இப்போது மீண்டும் திமுக ஆட்சியில் அந்த பணிகளை முடுக்கிவிட  உத்தரவிட்டு இருக்கிறேன். 5 திட்ட சாலைகளை செயல்படுத்துவதற்கும், கோவையில் குடியிருப்புகளில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கும் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. கோவை மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் புதிய பாதாளசாக்கடை திட்டங்கள், அதற்க்கு 350 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுத்தப்பட இருக்கின்றது.

கோவை மாநகராட்சியின் மையப் பகுதியில் இருக்கக்கூடிய சிறைச்சாலை நகரின் வெளியே கொண்டு செல்லப்படும். காந்திபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நடைபாதை  போன்ற அனைத்து வசதிகளும்….  கூட்ட அரங்கு,  வெளி அரங்கு போன்ற கட்டமைப்பு கொண்ட செம்மொழிப் பூங்கா இரண்டு கட்டங்களாக 200 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட இருக்கிறது. கோவை மாநகர பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைமுறையை  மேம்படுத்துவதற்காக 11 கோடி ரூபாய் செலவில் கூடுதல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படஇருக்கின்றது.

கோவை மாநகர மக்களுக்கு சிறப்பாக மருத்துவ வசதிகள் அளிக்கக்கூடிய  வகையில் 16 கோடி ரூபாய் செலவில் 63 நலவாழ்வு மையங்கள் மற்றும் மூன்று மருத்துவ ஆய்வுக்கூடங்களில் கட்டப்படுகிறது. கோவை மாநகரபகுதிகளில் சாலை விளக்கு இல்லாத பகுதிகளில் 20 கோடி ரூபாய் செலவில் புதிய தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

இந்த பணிகளுக்கான அரசு ஆணைகளை விரைவில் வெளியிட்டு அதற்கான நிதியை விரைந்து ஒதுக்கி திட்டப் பணிகளை விரைந்து முடித்து, நிச்சயமாக அதனை மக்களிடத்தில் ஒப்படைப்போம் என்ற உறுதியை உங்களையெல்லாம் வைத்துக்கொண்டு பெருமையோடு குறிப்பிட விரும்புகின்றேன் என தெரிவித்தார்.

Categories

Tech |