செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பருவமழைக்கு முன்னாடியே 19,500 மரக்கிளைகள் வெட்டப்பட்டது. இதனால் மரங்கள் வீழ்வது பெரிதும் தடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக 2,888 பேர் தாழ்வான பகுதியில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் கொண்டுபோய் அவர்களுக்கு முகாமிட்டு தங்கவைத்து இருக்கிறோம். 44 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிரார்கள். ஆனால் 169 முகாம்கள் தயார் நிலையில் இருந்தது. 78 வெள்ள நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருந்தது. 3 வேளையும் தரமான, சுவையான உணவு வழங்கப்பட்டது.
1,545 நிலையான மருத்துவ முகாம்கள், 824 நடமாடும் மருத்துவ முகாம் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 90,140 பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். சென்னையில் இதுவரை 400 இடங்களில் மழைநீர் தேங்கி இருந்தது, அதை தொடர்ந்து அகற்றப்படகூடிய அந்த பணி விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் செயல்படாத தன்மையின் காரணமாக தான் இத்தகைய அவலம் அப்போது ஏற்பட்டது.
எனினும் கடந்த நான்கு மாத காலமாக திமுக அரசு எடுத்த நடவடிக்கைகளால் மாபெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இத்தகைய துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தூர்வாரப்பட்டதன் காரணமாகத்தான் மிகப்பெரும் மழையிலிருந்து சென்னை மக்களை காப்பாற்றவும், பாதுகாப்பும் இருக்க வைக்க முடிந்தது இந்த அரசால்…
இதற்கு காரணமான சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், முன்கள பணியாளர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், காவல் துறையைச் சார்ந்த நண்பர்கள், நம்முடைய அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியையும், என்னுடைய பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.