Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவங்க தானா?… ‘D44’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் மூன்று நடிகைகள்… வெளியான அறிவிப்பு…!!!

தனுஷின் 44-வது படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

டி44 படக்குழு வெளியிட்ட போஸ்டர்

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் D44 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருக்கின்றனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளது.

Categories

Tech |