Categories
சினிமா மாநில செய்திகள்

அடடே இவரா….! “அஜித் படத்தில் இணையும் பிரபல வில்லன்”…. யாருனு நீங்களே பாருங்க….!!!!

எச்.வினோத் இயக்கத்தில்,அஜித் நடிப்பில்,போனிகபூர் தயாரிப்பில் வெளியாக உள்ள வலிமை படத்தை தொடர்ந்து, இவர்கள் மூவரும் இணைந்து புதிய படம் ஒன்றை எடுக்க உள்ளனர். இதில் பிரபல நடிகர் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில்,அஜித் நடிக்கும் வலிமை படத்தின் டீசர்கள் வெளிவந்த நிலையில் கடந்த பொங்கலுக்கு இந்தப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி  வைக்கப்பட்து. தற்போது அஜித், எச்.வினோத் மற்றும் போனிகபூர் சேர்ந்து மூன்றாவது முறையாக புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளனர். இந்த புதிய படத்தில் நடிகை தபு மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரகாஷ்ராஜ் எந்த ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாலும் அந்த ஒரு  கதாபாத்திரமாகவே மாறி நடிப்பார் என்பது நமக்கு தெரிந்த உண்மை. அதேபோல் இந்த திரைப்படத்திலும் அவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் என்பதை எதிர்பார்க்கலாம். இவர் ஆசை மற்றும் பரமசிவம் படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |